இன்றையதினம் அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள பல பொருளாதார நிலையங்களில் இன்றையதினம் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. பொருளாதார மையங்களுக்கு காய்கறி வரத்தும் குறைவடைந்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை, எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு பங்களித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெறப்பட்ட மரக்கறிகளின் அளவும் கணிசமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.