நிம்மதியான தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்…வாங்க என்னவென்று பார்ப்போம்

நல்ல தூக்கத்திற்கான தைலம்

ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் தூக்க தைலம் தூக்கமின்மைக்கு ஒரு வழக்கத்திற்கு மாறான தீர்வாகும். தூக்கத்தை வரவழைக்கும் தைலங்களைத் தயாரிக்க பல பிராண்டுகள் தொடங்கியுள்ளன. ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் தூக்க தைலங்கள் நிச்சயம் விலை உயர்ந்தவையாகவே இருக்கும். உங்களுக்கு பணம் அதிகம் செலவழிக்காமல் இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக ஒரு தூக்க தைலம் தயாரிக்க வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

தூக்க தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

* தேன் மெழுகு – 1 டேபிள் பூன்

* வைட்டமின் ஈ எண்ணெய் – 1 டீபூன் *

ஆரஞ்சு அத்தியாவசிய நறுமண எண்ணெய் – 8 துளிகள்

* லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் – 8 துளிகள்

* சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 1 சீமைச்சாமந்தி தேநீர் பை

* சிறிய கண்ணாடி ஜார்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறக்கவும்.

* பின் அந்த எண்ணெயை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சீமைச்சாமந்தி தேநீர் பையை போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

* பின்பு அந்த பையை பிழிந்து எடுத்துவிட வேண்டும்.

* ஒரு பௌலில் தேன் மெழுகை உருக்கி எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் ஊற்றி, செட் ஆகும் வரை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், தைலம் தயார்.

தூக்க தைலத்தை பயன்படுத்தும் முறை:

* இரவு தூங்குவதற்கு படுக்கைக்கு வந்த பின், தயாரித்து வைத்துள்ள தூக்க தைலத்தை நெற்றி மற்றும் உள்ளங்காலில் தடவ வேண்டும். * அப்படி தடவும் போது சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். * பின் மொபைல், லேப் டாப் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை அணைத்து விட்டு, கண்களை மூடினால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

குறிப்பு:

ஒருவேளை நீங்கள் தயாரித்த தூக்க தைலம் எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால், கவலைப்படாதீர்கள். ஒருசிலருக்கு இந்த தைலம் வேலை செய்ய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் இந்த தைலம் ஒரு நல்ல பலனைத் தரக்கூடியது.