உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 5.5மில்லியனைக் கடந்தது..!!

உலகையே அச்சுறுத்திவரும் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்துள்ளது. அத்துடன், மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் இந்த கொரோனா நோயால், 3 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதுதவிர, வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்த படியாக பிரேஸில், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.அதேநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட நாடாகவும் அமெரிக்கா உள்ளது. அடுத்தபடியாக பிரித்தானியா, இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.