சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜூன் 5 முதல் சனி இந்த ராசிக்காரங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுப்பாராம்..உங்க ராசி இதில இருக்கா?

மேஷம்

சனியின் வக்ர நிலையால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் சில பிரச்சனைகள் வரலாம். மேலும் இந்த காலகட்டம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் தடைகளை சந்திக்கலாம். மேலும் பண இழப்பு அல்லது நோய்களால் அவதிப்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்

வக்ரமாகும் சனியால் சந்திக்கும் தொந்தரவுகளைத் தவிர்க்க வேண்டுமானால், மேஷ ராசிக்காரர்கள் இக்கால கட்டத்தில் சனி சாலிசாலை தினமும் பாராயணம் செய்து வருவது நல்லது. இதனால் சனியினால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம்.

கடகம்

சனி வக்ரமாவதால் கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை இனிமையாக வைத்துக் கொள்ள முயலுங்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் திருமண உறவில் டென்சன் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அனுமதிக்காதீர்கள். சனி பகவான் கர்மாவைக் கொடுப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆகவே இக்காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை என்றால், உடனே உங்கள் திட்டங்களை மீண்டும் மீண்டும் மாற்றாமல், பொறுமையாக இருந்து, பின் முயற்சி செய்யுங்கள். முக்கியமாக மற்றவர்களின் கருத்துக்களை எடுக்கும் முன், அதை முழுமையாக சோதித்துப் பாருங்கள்.

பரிகாரம்

சனி வக்ர நிலையால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க கடக ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் ஏழை எளியோருக்கு அல்லது இல்லாதவர்களுக்கு கருப்பு நிற பொருட்களை தானமாக வழங்குங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! சனி வக்ரமாவதால் உங்கள் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் பேச்சு குறைபாட்டினால் ஈகோ அதிகரித்து, அதன் காரணமாக சிக்கலில் சிக்கலாம். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிக்கலாம். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், புத்திசாலித்தனமாக முடிவு எடுங்கள். ஏனெனில் இக்கால கட்டத்தில் நீங்கள் எளிதில் ஏமாற்றப்படலாம். எனவே கவனமாக இருங்கள்.

பரிகாரம்

சனி வக்ரமாவதால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தடுக்க சனிக்கிழமை அன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு கடுகு எண்ணெயைக் கொடுத்து அர்ச்சனை செய்தால் பிரச்சனைகள் குறையும். மேலும் தொண்டு பணிகளில் ஈடுபடுங்கள். மறந்தும் பிறரை அவமதிக்காதீர்கள். சோம்பலை கைவிடுங்கள்.