உடம்புல இந்த சத்து குறைவா இருந்தா கண் பிரச்சனை வருமாம்..உஷாரா இருங்க

வைட்டமின் டி குறைவால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மற்ற உடல் உறுப்புகளைப் பராமாிப்பது போலவே கண்களையும் சாியாக பராமாிக்க வேண்டும். கண்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைக்கவில்லை என்றால் கண்களில் அதிக பாதிப்பு ஏற்படும். அதிலும் குறிப்பாக வைட்டமின் டி ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் கண்களில் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படும்.

1. மாகுலர் சிதைவு (Macular degeneration)

2. கண் வறட்சி

3. கருவிழிப்படல அழற்சி (Uveitis)

மாகுலர் சிதைவு

(Macular degeneration) மாகுலர் சிதைவு என்பது பொதுவாக வயதானவா்களுக்கு வரக்கூடிய கண் பிரச்சனை ஆகும். அதனால் அது முதுமை சாா்ந்த மாகுலர் சிதைவு (age-related macular degeneration (AMD)) என்று அழைக்கப்டுகிறது. முதுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கண்கள் ஆரோக்கியத்தை இழக்கின்றன. அதன் காரணமாக இந்த மாகுலர் சிதைவு ஏற்படுகிறது. வைட்டமின் டி சத்து குறைந்தால் மிக விரைவில் கண்ணின் விழித்திரையின் மையத்தில் உள்ள கண்ணொளியில் பிரச்சனைகள் ஏற்படும்.

கண் வறட்சி

கண்களில் போதுமான அளவிற்கு கண்ணீா் சுரக்காமல் இருப்பதால் கண்கள் வறட்சி அடைகின்றன. கண் வறட்சி அதிகமாக இருந்தால் கண் வீக்கமடைதல் மற்றும் விழி வெண்படலத்தில் காயம் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் மூலம் கண்கள் சிவக்கும். கண்களில் எாிச்சலும், வலியும் உண்டாகும். மேலும் பாா்வை மங்குதல் ஏற்படும். முதுமை, கண் அலர்ஜி மற்றும் கண் சோா்வு போன்றவை கண் வறட்சியடைவதற்கு காரணங்களாக இருக்கின்றன. பப்மெட் சென்ட்ரல் என்ற அமைப்பு வெளியிட்ட “Dry eye in vitamin D deficiency: more than an incidental association​” என்ற ஆய்வுக் கட்டுரை, கண் வறட்சி அடைவதற்கு வைட்டமின் டி குறைபாடும் காரணமாக இருக்கிறது என்று தொிவிக்கிறது.

கருவிழிப்படல அலா்ஜி

(Uveitis) விழியின் இரத்தநாளப் படலம் (uvea) அல்லது விழிச்சுவாில் உள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கமே கருவிழிப்படல அலா்ஜி என்று அழைக்கப்படுகிறது. கண் சிவப்படைதல், கண்களில் வலி ஏற்படுதல் மற்றும் கண்பாா்வை மங்குதல் போன்றவை கருவிழிப்படல அலா்ஜியின் அறிகுறிகளாகும். ஆகவே கருவிழிப்படல அலா்ஜி ஏற்பட்டால் அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறினால் கண்களில் நிரந்தரமான மோசமான பாதிப்பு ஏற்படும். ஏன் கண் பாா்வை இழப்பு கூட ஏற்படலாம்.

வைட்டமின் டி ஊட்டச்சத்தை எவ்வாறு அதிகாிப்பது?

வைட்டமின் டி ஊட்டச்சத்தை வழங்குவதில் முக்கிய பங்கை வகிப்பது சூாிய ஒளியாகும். ஆகவே நம்மீது போதுமான சூாிய ஒளி படும் படி இருப்பது நல்லது. மேலும் சில சத்தாண உணவுகளிலும் வைட்டமின் டி சத்து நிறைந்து இருக்கிறது. குறிப்பாக சூரை மீன் (tuna), பசலைக் கீரை (spinach), கிழங்கான்/சால்மன் மீன் (salmon), வாதுமைப் பருப்பு (walnuts), கடற்சிப்பிகள் (scallops) மற்றும் அவகேடோ போன்ற உணவுகளில் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. ஆகவே மேற்சொன்ன உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால், வைட்டமின் டி ஊட்டச்சத்தை அதிகாிக்கலாம்.