11 நாட்களின் பின்னர் பரப்பவே முடியாது.!! சிங்கப்பூர் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 11 நாட்களின் பின்னர் அவரால் கொரோனாவை ஏனைய நபர்களுக்கு பரப்ப முடியாது என்று சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். முதல் 11 நாட்களில் மட்டுமே அவர் தும்மும் மற்றும் இருமும் போது கொரோனா பரவுகிறது. அதன் பின்னர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மை அதனை கட்டுபடுத்தி விடும்.இல்லையென்றால் கூட, கொரோனா வைரஸ் பெரும்பாலும் நுரையீரலுக்குள் இருப்பதால், இருமினால் கூட அது வெளியே வருவது இல்லை என்று சிங்கப்பூர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் என்பது, முதல் 11 நாட்களில் தான் கூடுதலாக ஒரு மனிதரில் இருந்து மற்றைய மனிதருக்கு பரவுகிறது என்பதனை அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.