இலங்கை சுற்றுலா சபையின் அனுமதி மற்றும் பதிவுகளை செய்துள்ள கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் நாளை முதல் தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றி தமது சேவைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிறுவனங்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வருகின்றவா என்பதைக் கண்காணிக்க ஆறு குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ருவான் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.