தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒரே பிரவசத்தில் பிறந்த 3 குழந்தைகள்..!!

வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தைகளை பிரசவித்துள்ளார். அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு ஓரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.குறித்த பெண் கடற்டை சிப்பாயின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தமையினால் தங்கள் குழந்தையை நேரில் பார்க்க முடியாத நிலைமை கணவருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், வீடியோ தொழில்நுட்பம் மூலம், குழந்தைகளை பார்வையிடும் சந்தர்ப்பத்தை கணவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.