150 வருடங்களுக்கும் மேலாக தமிழர்களின் பாரம்பரிய ரயிலடுக்குப் பாத்திரத்தை பொக்கிஷமாக பேணிப் பாதுகாக்கும் தமிழ்ப் பெண்மணி..!!

தமிழகம் சிவகங்கையில் 150 ஆண்டு பாரம்பரிய ரயிலடுக்கு’ பித்தளைப் பாத்திரத்தை காலம் காலமாக பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். தமிழகம் சிவகங்கைப்பெருமாள் கோயில் தெரு எஸ்.மதுரவள்ளி 65. இவரது வீட்டில் பாரம்பரியமாக இப்பாத்திரத்தை பராமரித்து வருகின்றனர்.150 ஆண்டுக்கு முன் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் சென்று வர ஆறு மாதமாகும்.இதற்காக சத்திரங்களில் தங்கும் போது, இந்த ஒரு பாத்திரத்தை எடுத்து சென்று மொத்த குடும்பத்திற்கே சமைத்துத் தந்துள்ளனர்.14 வகை பாத்திரங்கள்.இதில், 10 பேருக்கு தேவையான 3 படி அரிசியில் சாதம் சமைக்கும் பெரிய பாத்திரம்.பொரியல் செய்ய 3 அடுக்கு பாத்திரம், சாதம் வடிக்கும் தட்டு, (சிப்பல்) குழம்பு சட்டி, காபி, டபரா செட், இலுப்பை சட்டி, குடிநீர் செம்பு, அரிசி அளவிடும் படி, பித்தளை டம்ளர், உட்பட ஒரே பாத்திரத்திற்குள் 14 வகை சிறிய பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளது தான் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.எங்கள் முன்னோர் பயன்படுத்திய 150 ஆண்டுக்கும் மேலான இப்பாத்திரத்தை இன்றைய தலைமுறையினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் என தமிழகம் சிவகங்கைப்பெருமாள் கோயில்தெரு எஸ்.மதுரவள்ளி தெரிவிக்கிறார்.