148 வருடங்களின் பின் இலங்கையில் முட்டையிட்ட விசித்திரப் பறவையினம்…!!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பறவை இனம் ஒன்று புந்தல தேசிய வனப்பகுதியில் கடந்த 21 ஆம் திகதி குஞ்சுகளைப் பொரித்துள்ளன. இந்தப் பறவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனப் பகுதியின் பொறுப்பாளர் அஜித் குணதுங்க தெரிவித்துள்ளார்.வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.சுற்றுலாப் பறவை இனங்கள் தமது வாழ்விடங்களாக பயன்படுத்தும் புந்தல தேசிய வனப் பகுதிக்குள் ஜீப் வண்டிகள் செல்ல வேறு பாதை அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக வனப் பகுதி மூடப்பட்டுள்ளது. மீண்டும் வனப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டாலும், சுற்றுலாப் பறவைகளின் பாதுகாப்பு கருதி ஜீப் வண்டிகள் செல்வதற்கான வழிகள் மூடப்படும் என அஜித் குணதுங்க குறிப்பிட்டுள்ளார்.


குறித்த சுற்றுலாப் பறவை இனம் 148 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் முட்டையிட்டு தனது குஞ்சுகளைப் பொரித்துள்ளமை சிறப்பம்சமாகும் என சுற்று சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.