கொரோனாவினால் ஆட்டம் கண்ட ரயில்வே திணைக்களம்…இத்தனை கோடி ரூபா நஷ்ட்டமாம்..!!

ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் ஒன்பது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அல்படுத்தப்பட்ட கடந்த இரண்டு மாத காலப்பகுதியிலேயே ஒன்பது கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரயிலில் பயணிப்பதற்காக விநியோகிக்கப்படும் பருவச்சீட்டுகள் கடந்த இரண்டு மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தற்போது குறைவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.