பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்…முழுமையான சுகாதார விதிகளைப் பின்பற்றியே பொதுப்போக்குவரத்துச் சேவை…!!

சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதித்தால் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர தயாரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டிருந்தன.தற்போது நாடு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இந்நிலையில், இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாட்டின் நிலைமை சீராகி வரும் நிலையில் பொதுப்போக்குவரத்து சேவையை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து அமைச்சு தயார் நிலையில் வைத்திருக்கிறது.எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு வழமைக்குத் திரும்புமென எதிர்பார்க்கின்றேன்.சுகாதார அமைச்சு முழுமையாக பச்சைக்கொடி காட்டினால் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும். அதன்படி மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படும்.இதேவேளை போக்குவரத்துச் சேவை வழமைக்குத் திரும்பினாலும் பேருந்து மற்றும் ரயில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற பயணிகள் மட்டுமே அதில் பயணிக்க அனுமதிக்கப்படும்.கடந்த காலங்களை போன்று அளவுக்கதிகமான பயணிகளை பயணிக்க அனுமதிக்க முடியாது. நிலைமை வழமைக்குத் திரும்பினாலும் சுகாதார விதிமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.இதனை கண்காணிக்கும் பொறுப்பினை போக்குவரத்து பொலிஸார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்.பொதுமக்கள் தமது பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பொலிஸார் கட்டுப்படுத்தினாலும், இல்லாவிட்டாலும், கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடப்பதே சாலச்சிறந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.