தாயைப் பிரிந்து குடிமனைக்குள் வந்த யானைக்குட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பாதுகாப்பாக மீட்பு..!!

வவுனியா கலாபோகஸ்வெவ பகுதியில் நேற்று (23) இரவு தாயைப் பிரிந்து மக்கள் குடிமனைப்பகுதிக்குள் வந்த யானைக்குட்டியை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர். வவுனியா கலாபோகஸ்வௌ பகுதியில் மக்கள் குடிமனைக்குள் வந்த யானைக் குட்டியொன்று சத்தமிட்டுள்ளது. இதனைக் கண்ட பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தல் வழங்கியிருந்தனர்.இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைக்குட்டியை மீட்டு வவுனியா கொண்டு வந்துள்ளதுடன், கிளிநொச்சி அல்லது அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரியை அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் யானையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.