பேருந்துக் கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துமாறு கோரிக்கை..!

பேருந்துக் கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்குச் சொந்தமான பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்தில் ஈடுபடும் போது கட்டணங்களை வழமை தொகையை விடவும் அரை மடங்கு அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதனால் கட்டணங்களை 50 வீதத்தினால் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன கோரியுள்ளார்.