கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் முன்னணி வகிக்கும் இலங்கை..!!

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவ விடாமல் கட்டுப்படுத்திய உலக நாடுகளில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உயர் அர்ப்பணிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் இலங்கையினுள் இருந்த பாரிய கொரோனா கொப்புகள் அனைத்தையும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.தற்போது வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை கொப்புகள் மாத்திரமே உள்ளதாகவும், அதுவும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கொரோனாவுக்காக மருந்து ஒன்று கண்டுபிடிக்கும் வரை அதன் பரவலின் ஆபத்து நீங்காதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.