மேலும் 10 கடற்படை வீரர்கள் குணமடைவு..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 420 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.