ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி..!!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டமானது, மறு அறிவித்தல்வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம், எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.