இலங்கையில் வேகமாக மறைந்து வரும் கொரோனா..!! இன்று மட்டும் 40 பேர் வீடு செல்ல அனுமதி..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் மேலும் 40 பேர் குணமான நிலையில் இன்று வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது.அதேவேளை இலங்கையில் மொத்தமாக 1068 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் (இன்று பிற்பகல் ஒரு மணிவரையில்) பதிவாகியுள்ளனர்.அதில், 339 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.101 பேர் கொரோனா சந்தேக குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.