ஜனாதிபதி கோட்டாபயவுடன் இந்திய பிரதமர் தொலைபேசியூடாக உரையாடிய மிக முக்கிய விடயங்கள்..!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இன்றைய தினம் இரு நாட்டு விடயங்கள் தொடர்பில் தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார்.

அந்த உரையாடலின் போது, கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டுத் தெரிவித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, ஸ்ரீலங்காவில் இந்தியாவின் முதலீட்டுப் பணிகள் மற்றும் இதர வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இந்த உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் அதிகரித்துச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.