கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சானிடைசர் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.எப்போதும் சோப் போட்டு கைகளை கழுவிக்கொண்டிருக்க முடியாது என்பதால் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் என சானிடைசரை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தினமும் சானிடைசர் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அவை குறித்து பார்க்கலாம்.

சானிடைசர் கைகளில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ்களை கொல்லும் என்பது நல்ல விஷயம் தான்.அதே நேரத்தில் உடலில் இருக்கும் நுண்ணியிரிகளையும் சானிடைசர்கள் அழிக்கின்றன.அதாவது உடல் நலத்திற்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன.அதனால் சோப் போட்டு கை கழுவ முடியாத நேரத்தில் மட்டும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.ஹேண்ட் சானிடைசர்கள் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லும் அளவிற்கு கையில் இருக்கும் அழுக்களை நீக்காது.

கைகளில் மண், கிரீஸ் போன்றவை ஒட்டியிருந்தார் சோப் போட்டு கழுவுவதே சிறந்தது.தினமும் சானிடைசர் உபயோகிப்பதன் மூலம் கைகள் மிகவும் உலர்ந்து போகும்.ஆனால் சோப் போட்டு கழுவுவதன் மூலம் கைகள் ஈரப்பதத்துடன் காணப்படும்.சானிடைசரில் உள் ள ஆல்கஹால் வாய் வழியே உடலுக்குள் செல்லும் போது உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தெரியாமல் கைகளை உதட்டில் வைத்தால் பெரிய பிரச்னை ஏதும் ஏற்படாது.ஆனால் வாய்க்குள் செல்லும் போது வயிற்றுக்குள் பிரச்னை ஏற்படும்.மத்திய நோய் தடுப்பு கழகம் கூறியிருப்பது என்னவென்றால், குழந்தைகளுக்கு சானிடைசர் மூலம் அதிக பாதிப்பு இருக்கிறது என்றும், அதனால் அவர்கள் கைகளுக்கு கிடைக்காத தூரத்தில் சானிடைசரை வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது