கொரோனாவைத் தொடர்ந்து குழந்தைகளைக் குறிவைக்கும் புதிய பேராபத்து..!

உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொரோனாவை தொடர்ந்து பேராபத்து ஒன்று பரவி வருகின்றது கவசாகி என்ற இந்த நோய்த் தொற்று சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு குழச்தை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.5 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இது குறித்து  கருத்துரைத்த போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களுக்கு 5 நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.