ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு அதிரடியாக குறைக்கப்பட்ட சம்பளம்…!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவை தொழில் சர்வதேச ரீதியாக பாரதூரமான நெருக்கடியை சந்தித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை வழங்கவும் சம்பளத்தில் சிறு தொகையை குறைப்பது எனவும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் உட்பட பணிப்பாளர் சபையினர் தீர்மானித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 2.5 வீதம் முதல் 25 வீதம் வரையான தொகை மூன்று மாத கால சம்பளத்தில் கட்டாயம் குறைக்கப்படும் எனவும் 2020 ஆம் ஆண்டுக்கான அனைத்து சம்பள அதிகரிப்புகளையும் தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அடுத்த 21 ஆம் திகதி வரை அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது செலவை குறைப்பதற்காக மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதனை தவிர, அத்தியவசியமற்ற அனைதது வர்த்தக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தவும் பிரதான விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்களை செலுத்த கால அவகாசம் கோரவும் கட்டணங்களையும் குறைக்கவும் ஸ்ரீலங்கன் விமான சேவை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.