ஆட்டிப்படைக்க காத்திருக்கும் உக்கிர சனி…? குறி வைக்கும் ராகுவால் ஜூன் மாதம் சிம்மத்துக்கு காத்திருக்கும் ஆபத்து?

2020ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்து உலகம் முழுவதுமே பிரச்சினைதான். கொரோனா வைரஸ் பீதியால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார்.

மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது. ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார்.18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான்.இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் புதிய வேலைகள் மாறாலாமா என்று யோசிப்பீர்கள். இப்ப இருக்கிற பொருளாதார சூழ்நிலையில் நாம் பார்க்கிற வேலை நிரந்தரமாக இருக்குமா? இதை விட நல்ல வேலைக்கு நிறைய சம்பளம் வரக்கூடிய வேலைக்கு மாறாலாமா என்ற யோசனையில் இருப்பீர்கள்.சூரியனும் சுக்கிரன் பத்தாம் வீட்டில் இணைந்திருப்பதால் வேலை பற்றி பல விதமாக யோசிப்பீர்கள். மார்க்கெட்டிங் துறை, கடை வியாபாரம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல லாபம் வருமானம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம். நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம்.

குரு வக்ரமடைந்து பின்னோக்கி வருவதால் சுப காரிய தடைகள் ஏற்படும் என்பதால் நல்ல விசயங்களை பேச இது உகந்த நேரமில்லை.பிள்ளைகளால் சில தொல்லைகள் வரலாம். நிறைய செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டில் சனி வக்ரமடைந்திருப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். திடீர் விபத்துக்கள் வரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க நிதானமாக இருங்க. வாழ்க்கையை பற்றி புரிதல் ஏற்படும். மாத பிற்பகுதியில் கிரகங்களின் மாற்றத்தினால் வேலையிலும் வீட்டிலும் நிதானமாகவும் கூடுதல் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய கால கட்டம் இது.

கன்னி ராசி:ஜூன் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மனம் ஊசலாட்டத்திலேயே இருக்கும். ராகு உடன் இணைந்த புதன் வேலையில் நல்ல மாற்றத்தை தருவார்.நிறைய வருமானம் கிடைக்கும். சுக்கிரனால் அதிர்ஷ்டம் தேடி வரும் உங்க குடும்பத்திற்கான தேவைகள் பூர்த்தியாகும்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்திற்கு சுப செலவுகள் வரலாம். மாத பிற்பகுதியில் சூரியன் புதனோடு இணைவதால் வேறு வேலை மாறாலாமா என்ற யோசனை வரும்.புதன் ராகு வோடு இணைந்திருப்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க வேகமாக போகாதீங்க. மாணவர்களுக்கு குழப்பமான மனநிலை இருக்கலாம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்துங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. வக்ரமடைந்த சனியால் மனதளவில் சில குழப்பத்தையும் நிரந்தரமில்லாத நிலையையும் ஏற்படுத்தும்.


செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து பார்க்கிறார். மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டில் இருந்தும் பார்ப்பதால் கணவன் மனைவி இடையே பேசும் போது கவனமாக இருங்க. புது முயற்சிகள் எதையும் இந்த மாதம் செய்ய வேண்டாம்.

குரு பகவான் உங்களின் எதிர்காலத்தை பற்றி யோசிக்க வைப்பார். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. அஜீரண பிரச்சினைகள் வரலாம் வயிறு கோளாறு, வாய்வு தொந்தரவுகள் வரலாம்.காரமான எண்ணெய் பலகாரங்களை சாப்பிட வேண்டாம். இரவு நேரங்கடந்து சாப்பிடாதீங்க. சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க