107 பயணிகளுடன் திடீரென வீழ்ந்து நொருங்கிய விமானம்.!! அதிஷ்ட வசமாகப் பிழைத்த இரு உயிர்கள்.!!

நேற்றைய தினம்(22) பாக்கிஸ்தான் கராச்சியில் 107 பேருடன் பயணித்த விமானம் குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொருங்கியது. இதில் பயணித்த 107 பேரும் இறந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், அதில் இருந்து Bank Manager ஒருவரையும், சிறுவன் ஒருவரையும் அவ்வூர் மக்கள் உயிருடன் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பாக்கிஸ்தான் விமானம் பறப்பில் இருந்த வேளை, திடீரென இரண்டு எஞ்சின்களும் செயல் இழந்ததாகவும், இதன் காரணத்தால் சடுதியாக அது குடியிருப்பு பகுதி மீது வீழ்ந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். விமானத்தில் இருந்து திடீரென எந்த சத்தமும் கேட்க்கவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.