இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று…மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம்..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்று (22) இரவு 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,060 இலிருந்து 1,068 ஆக அதிகரித்துள்ளது.இன்று (22) இதுவரை 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 பேரில் நால்வர் கடற்படையினர் எனவும், ஒருவர் மலேசியாலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,068 பேரில் தற்போது 439 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 620 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 110 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் – 1,068
குணமடைவு – 620
இன்று அடையாளம் – 13
இன்று குணமடைவு – 16
சிகிச்சையில் – 439
மரணம் – 09