பிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். நேற்றய மரணங்களை விட இந்த எண்ணிக்கை அதிகமானது.
தற்போதைய கணிப்பீட்டின்படி பிரிட்டனில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2921 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை ஒரேநாளில் 4224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33718பேராக உயர்ந்துள்ளது.