கொழும்பில் உயிரிழந்த கொரோனா நோயாளியின் உறவினர்களுக்கும் தொற்று உறுதி..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மூன்றாம் நபரின் மருமகனும் பேரப்பிள்ளைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.72 வயதுடைய மருதானை பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது பேரப்பிள்ளைக்கும் மருமகனும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று உறுதியாகி 24 மணி நேரங்கள் கடப்பதற்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது உடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை உயிரிந்த நபருடன் நெருக்கமாக செயற்பட்ட 300 பேர் புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.குறித்த 300 பேரை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.