78 வயதுத் தாயும் 60 வயது மகனும் நஞ்சருந்தித் தற்கொலை! கற்பிட்டியில் சோகம்..!!

புத்தளம் கற்பிட்டி பொலிஸ் பிரிவில் 78 வயதான தாயும், 60 வயதான மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த மகன் மட்டக்களப்பில் வசிப்பவர் எனவும், இன்று காலை தனது தாயாரை பார்க்க முசல்பிட்டி பகுதிக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.உயிரிழந்தவர்களின் உடல்களை நீதவான் பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்