வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல கோடான கோடி நன்மைகள் ஏற்படுமாம்..!

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் குடல் சுத்தமாகுவதோடு மட்டுமல்லாமல் தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். தினமும் இதை தவறாமல் மலம் கழித்து வருவதால் உடலில் உள்ள கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்.


தண்ணீரை குடித்து வருவதால் உடலில் உள்ள மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள ந ச்சுக்கள் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.தினமும் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் ந ச்சுக்கள் வெளியேறி விரைவில் பசி எடுக்கும்.அது மட்டுமல்லாமல் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இரத்தம் அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் அவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து தலைவலி மற்றும் அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள ந ச்சுக்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து வெளியேறி உடல் எடையை குறைக்கலாம்.

நமது உடலில் உள்ள குடலானது சுத்தமாக இல்லாவிட்டால் முகத்தில் பருக்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் முகத்தில் வருவதால் சருமம் அழகை இ ழந்துவிடும். தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால் குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு முகம் பருக்கள் இல்லாமல் பொலிவுடன் காணப்படும்.