மார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..!

சளிப் பிரச்சினை மனிதனை வாட்டி வதைக்கும். கொரோனா தொற்று இருக்கும் இக்காலக்கட்டத்தில் யாருக்கும் சளி இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.அப்படியே மார்பில் சளி ஏற்பட்டால் அதை போக்க இயற்கை வைத்தியம் உள்ளது.

இயற்கை வைத்தியம் – 1,கற்பூரவல்லிச்சாறு – 4 ஸ்பூன்,கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்,மிளகு – 50 கிராம்,சுக்கு – 50 கிராம்,திப்பி- – 50 கிராம்.

கற்பூரவல்லிச் சாற்றை தவிர மற்ற நான்கு பொருட்களை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு டம்ளர் பாலில் பொடியாக்கிய பொருளோடு கற்பூரவல்லி சாற்றை கலந்து குடித்தால் தொண்டைபுண், சுவாசப்பையில் ஏற்படும் புண், மார்புச்சளி ஆகியவை உடனே தீரும்.

இயற்கை வைத்தியம் – 2,கஸ்தூரி மஞ்சள் – 70 கிராம்,கருஞ்சீரகம் – 25 கிராம்,கடலைப்பருப்பு – 1/4 கிலோ,வெள்ளை மிளகு – 50 கிராம்,வெற்றிலை உலர்ந்தது – தேவைக்கேற்ப
இவையனைத்தையும் ஒன்று கலந்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வாமையில் ஏற்படும் சருமத்தடிப்பு, அரிப்பு, நமைச்சல், தோல் வியாதிகளுக்கு இந்தப் பொடியை பூசிக் குளித்தால் உடனே சரியாகும்.