நுகர்வோருக்கு முக்கியமான செய்தி.. சமையல் எரிவாயு கலனின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்..!!

சமையல் எரிவாயுக் கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மறுத்துள்ளது.

சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும், இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதேவேளை சமையல் எரிவாயுக் கொள்கலன்களின் விலையை அதிகரிக்குமாறு எந்தவொரு எரிவாயு நிறுவனமும் தமக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.