கோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்!

தற்போது பெருந்தொற்றாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்று நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளில் உள்ள அரசாங்கம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் மக்களைக் கொண்டு செல்ல வழி நடத்தி வருகின்றன. பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தளர்வுகள் கொடுக்கப்பட்டதால் நாம் கிருமியை வென்றுவிட்டோம் என்பது அர்த்தமில்லை. கிருமி தாக்கும் அபாயம் இப்போதும் அதிகம் உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக விலகலை நாம் மேலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக இருக்க சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் மாஸ்க் அணியும் போது சில குறிப்பிட்ட விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படி அழுக்கு கைகளால் மாஸ்க்கை தொடுவதால் மாஸ்க் அணிவதற்கான பலன் முற்றிலும் அழிக்கப்படுகிறது. கிருமிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவே நீங்கள் மாஸ்க் அணிகிறீர்கள். ஆனால் நீங்கள் அழுக்கு கைகளால் மாஸ்க்கை தொடுவதால் உங்களை நீங்களே அபாயத்திற்கு உட்படுத்திக் கொள்கிறீர்கள். எனவே முகத்தில் உள்ள மாஸ்க்கை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிவதற்கு முன் முகம் மற்றும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவிய பின் மாஸ்க் அணிவது இன்னும் சிறந்தது. ஒருவேளை மாஸ்க்கை சரி செய்யும் நிலை ஏற்பட்டால், கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்தபின் சரி செய்யவும்.

ஒரு நாள் முழுவதும் வெளியில் வேலை செய்பவர்களுக்கு இந்த குறிப்பு பொருந்தும். வெளியில் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். ஆகவே உங்கள் கையில் எப்போதும் கூடுதல் எண்ணிக்கையில் மாஸ்க் வைத்திருக்க வேண்டும். பொதுவாக இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஒரு மாஸ்க் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டு மணிநேரத்திற்கு பின் நீங்கள் வேறு ஒரு மாஸ்க் பயன்படுத்தலாம் அல்லது அணிந்திருக்கும் மாஸ்க்கை கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். காரணம் இந்த நேரத்திற்குள் கிருமிகள் அந்த மாஸ்க்கில் படிந்திருக்கலாம். அதனை நீங்கள் நுகரும் வாய்ப்பு ஏற்படலாம்.

“நானும் மாஸ்க் அணிகிறேன்,” என்ற நோக்கில் மாஸ்க் அணிவதால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதனை சரியான விதத்தில் அணிய வேண்டும். எல்லா மாஸ்க்கும் ஒரே அளவில் இருப்பதில்லை. பலரும் அணியக்கூடிய மாஸ்க் மூக்கின் கீழ் விழுந்து விடக்கூடியதாக உள்ளது. சிலர் அணியும் மாஸ்க் வாய் பகுதிக்கு மேல் இருக்கிறது. இப்படிப்பட்ட மாஸ்க் அணிவதால் ஒருவேளை உங்களுக்கு கிருமி பாதிப்பு இருந்தால் பொது இடங்களில் நீங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது கிருமிகள் வெளியில் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே நீங்கள் ஒவ்வொரு முறை மாஸ்க் அணியும் போதும் அதனை கச்சிதமாக அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற அளவில் உங்கள் மூக்கு மற்றும் வாய் பகுதி முற்றிலும் மூடும்படி பார்த்துக் கொள்ளவும்.

லைஸால் போன்ற ரசாயனங்கள் மாஸ்க்கை சேதப்படுத்தலாம். ஆகவே மாஸ்க்கை கிருமிநீக்கம் செய்ய எந்த ஒரு ரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். இதற்கு மாற்றாக ஆல்கஹால் ஸ்ப்ரே மட்டும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துவதால் மாஸ்க்கில் ஒட்டியிருக்கும் கிருமிகள் முற்றிலும் கொல்லப்படும். இதனை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். N95 போன்ற மாஸ்க்குகளுக்கு இது மிகவும் ஏற்றது. வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் பயன்படுத்தும் போது வழக்கமாக பயன்படுத்தும் டிடர்ஜென்ட் மற்றும் சூடான நீர் கொண்டு மாஸ்க்கை சுத்தம் செய்யலாம். நன்றாக உலர வைத்து பின்பு பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தலாம்.

எல்லா மாஸ்க்குகளும் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சுவாசிக்கக்கூடிய வகையில் உள்ள துணி கொண்டு பின்பக்கமும் , சற்று கடினமான துணி கொண்டு முன் பக்கமும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் வடிகட்டும் செயல்முறை சிறப்பாக இருக்கும். அதனால் மாஸ்க் அணிவதற்கு முன் சரியாக பரிசோதித்து அணியவும். குறிப்பாக சந்தையில் விற்கப்படும் ப்ராண்ட் மாஸ்க்குகளுக்கு இது பொருந்தும். வீட்டில் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள் இரண்டு வகை துணி கொண்டு தயாரிக்காத பட்சத்தில் எந்த பக்கம் வேண்டுமானாலும் அணியலாம்.