6 மாதக் குழந்தை கொரோனாவால் பலி! பெரும் அதிர்ச்சியில் அமெரிக்கர்கள்..!!

அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தை குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.குழந்தையின் அறிக்கையில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.இந்தத் தகவலை அம்மாநில கவர்னர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.பிறந்து 6 வாரங்களே ஆக குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.