யாழ் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் இன்று அதிகாலை இரு பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொலை.!!

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.அத்துடன், விபத்து நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடமாடியுள்ளனர்.

இந்தத் தகவலினால், மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை நடைபெறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் சூழ்ந்துள்ளனர்.கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.மேலும், இச்சம்பவமானது கடந்த ஜீலை நடைபெற்ற தமிழ்சிங்கள மாணவர்களின் மொதலுக்கான பலிவாங்கள் செயற்பாடு என கருதப்படுகின்றது. இது போன்ற அடக்குமுறைகளின் மூலம் மக்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்து பயத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை சிங்கள ஆட்சியின் கீழும் சிங்கள மக்களின் கீழும் வைத்திருக்கவே தெற்கை சேர்ந்தவர்கள் விரும்புகிறார்கள்.

தகவல் : ஊடகவியலாளர் நியாந்தக்குமார்