யாழ் பல்கலையில் சிங்கள – தமிழ் மாணவர்கள் திடீர் மோதல்..!! பலர் படுகாயம்.!! மறு அறிவித்தல் வரை பல்கலைக்கு பூட்டு..!!

கொழும்பு: யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் திடீர் மோதல் ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களை வரவேற்க, இன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அப்போது தமிழ் கலாச்சார முறைப்படி நடனம் இடம்பெற வேண்டும் என்று தமிழ் மாணவர்களும், கண்டியா நடனம் ஆடி வரவேற்க வேண்டும் என்று சிங்கள மாணவர்களும் கூறினார். இதனால் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். தகவலறிந்து இராணுவம் மற்றும் போலீசார் பல்கலைகழகத்திற்கு வந்தனர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சிங்கள மாணவர்கள் சிலர் அந்த மேதலில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை புகைப்படம் எடுத்ததாகவும் அதை பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் நின்ற இராணுவத்திடம் காட்டி, தமிழ் மாணவர்களை அடையாளப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.இதை அறிந்து கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நிர்வாகிகள் பல்கலைக்கழகத்தை காலவரையின்றி விடுமுறை அறிவித்துள்ளனர். இதனால், மாணவர்கள் விடுதி மூடப்பட்டதை அடுத்து, அனைத்து மாணவர்களையும் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது.

செய்தி: ஊடகவியலாளர் நியாந்தக்குமார்