யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு மேல் பெறுமதி மிக்க உபகரணங்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூவர் அதிரடியாகக் கைது..!!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 7 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் உள்பட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.23,24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் (உருக்கிய நிலையிலும் தங்கம்) அகலத் திரை தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 தொலைபேசிகள், அப்பிள் ஐபேட் ஒன்று மற்றும் கிட் கார்ட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் நால்வரும், விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.