இலங்கையின் வடக்கில் தனது வீரியத்தைக் காட்ட ஆரம்பித்துள்ள கொரோனா! மக்களிடம் விடுக்கப்படும் அவசரக் கோரிக்கை!

உலகை கதி கலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தற்போது தனது வீரியத்தை ஸ்ரீலங்காவில் காட்ட தொடங்கியுள்ளது.உலகளவில் 45 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 9 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியா இலங்கை உட்பட 190 இற்கும் மேற்பட்ட நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் பாதிப்புக்கள் அதிகமாகி இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.வல்லரசு நாடுகளே வழி தெரியாமல் முழி பிதுங்கி நிற்கும் வேளையில் தற்போது ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகமாகி வருகின்றது.நேற்றுடன் 148 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதில் நால்வர் சுவிஸ் போதகருடன் தொடர்பை பேணிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.எனவே, இது தொடர்பில் மக்கள் அலட்சியம் கொள்ளாமல் இரட்டிப்பு கவனத்துடன் செயற்படவேண்டும் என அரசால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. அதிலும் குறிப்பாக எதிர்வரும் சில நாட்கள் மிகவும் முக்கியமான நாட்கள் எனக் கூறப்படுகின்றது.இது தொடர்பான முமுழுமையான விபரங்களுடன் வருகிறது இந்த செய்தி தொகுப்பு…