ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு,எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஏனைய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டு இரவு 8 முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னர் போன்றே நீடிக்கப்படும்.இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் மாற்றமின்றி தொடரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.