விடுதியில் தங்கியிருந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி? கூட இருந்த ஆண் திடீர் மாயம்..!!

ஹோமாகம பகுதியில் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதியொன்றில் தங்கியிருந்த பெண்ணொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 119 அவசர இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி, அவர் வைத்தியசாலைக்கு சென்றார்.எனினும், அவருடன் தங்கியிருந்த நபர், பெண் வைத்தியசலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாகவே விடுதியில் இருந்து வெளியேறி விட்டார்.அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அந்த நபர் பாதுகாப்புதுறையில் பணியாற்றலாமென கருதப்படுகிறது. அது தொடர்புடைய உடைகள் அந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அலவவை சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த விடுதி மூடப்பட்டுள்ளது.விடுதியில் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பெண்ணின் பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும் எனவும் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.