வெளிநாட்டிலிருந்து வந்த பெண் பயணித்த வாகனம்! தனிமைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணச் சாரதி..!!

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள் ஆகியோர் பயணம் செய்த வாகனத்தில் பயணித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.new lanka

பேராசிரியர் ஹூல் மற்றும் அவரது மகள் பயணம் செய்த காரில் இணைந்து பயணித்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரியொருவரும், வாகனத்தின் சாரதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.new lanka தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பணியாற்றும் சாரதியும், ஆணைக்குழுவின் ராஜகிரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.14 நட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவிக்கப்பட்ட பேராசிரியர் ஹூலின் மகள் இந்த காரில் சில தடவைகள் பயணம் செய்த காரணத்தினால் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி மற்றும் சாரதி ஆகியோருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.