வங்கக் கடலில் உருவெடுத்த மாபெரும் புயலினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள விமானநிலையம்!!(படங்கள் இணைப்பு)

வங்கக்கடலில் உருவெடுத்து அதி தீவிரமடைந்த அம்பன் புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்து மேற்குவங்கம் மற்றும் பங்களாதேஸ் இடையே கரையை கடந்தது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு திஹா – சுந்தரவன காடுகள் இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, இரவு 7 மணியளவில் கரையை கடந்தது.உருவெடுத்த அம்பன் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. new lanka 02அத்துடன் அங்கு பெய்த மழையால் கொல்கத்தா விமான நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு, விமான நிலையத்தின் மேல்தளங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஏராளமான விமானங்களும் சேதமாகியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அம்பன் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக்காற்று வீசியது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.new lanka 03ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.