கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான முக்கிய அறிவித்தல்!!

கொழும்பிலும்,கம்பஹாவிலும் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றுக்களின் கொத்தணிகள் செயலிழக்கச் செய்யப்படும் வரை இந்த ஊரடங்கு தொடரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.14 நாட்களுக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படாத நிலை ஏற்படும் போதே கொழும்பை முழுமையாக திறக்க முடியும் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையை பொறுத்தவரையில். இன்னமும் வெலிசறை கடற்படையினர் மத்தியில் கொரோனா கொத்தனியாக இருந்து வருகிறது.இதனைதவிர கொரோனதொற்றாளிகளாக கண்றியப்பட்ட பலர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து கண்டறியப்பட்டனர்.எனவே, சமூகப்பரவல் இன்னமும் ஏற்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.