முழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை சில நிமிடங்களில் எளிதாக நீக்கும் வழி இது தான்..!!

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது.எருக்கு இலையை அரைத்துப் நெல்லிக்காய் அளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.தேள் கடிக்கு சிறிதளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.இலைச்சாறு மூன்று சொட்டு, 10 சொட்டு தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

இரண்டு டீஸ்பூன். உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாக களிம்பு போல் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

எருக்கம்பூவினால் செய்த மருந்து -சுவாசகுடாரி மாத்திரை -சளி ,இளைப்பு ,சுவாசம் போன்ற நோய்களை தீர்க்கும்.எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​ மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.இதன் இலைகள்,​​ பூக்கள்,​​ வேர்,​​ பட்டைகள்,​​ எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை.

எருக்கு மொட்​டு​கள்,​​ சுக்கு,​​ ஓமம்,​​ கறுப்பு உப்பு ஆகியவற்றை மெல்லியதாகப் பொடியாக்கி,​​ சிறிதளவு தண்ணீர் கலந்து சிறிய மாத்திரைகளாக உருட்டிக் கொண்டு.தினசரி இரண்டு மாத்திரைகள்….. காலை,​​ மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம்,​​ பசியின்மை,​​ வாயு கோளாறு,​​ வயிறு உப்புசம் ஆகியவை நீங்கும்.காலரா,​​ வயிற்​றுப் போக்கு,​​ வாந்தி,​​ குமட்டல் போன்றவற்றால் உடல் பலவீனம் அடைவதிலிருந்து காக்க இரண்டு எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும்.

எருக்​கம் பால் தலைப் பொடுகு,​​ படை,​​ மூட்டு வலி​கள்,​​ மூட்டு வீக்கம்,​​ மூலநோய்க்கு மருந்தாகப் பயன்தருகிறது.காலில் முள் குத்தி ஒடிந்து உள்ளே இருந்தால் அந்த இடத்தில் எருக்கம் பாலைத் தடவினால். வலி குறைவதுடன் முள் குத்திய இடம் விரைவில் பழுத்துச் சீழ் வெளியே வரும்.அதனுடன் முள்ளும் வெளியே வந்துவிடும். குதிகாலில் வலி வந்தால், செங்கல்லைச் சூடாக்கி அதன்மீது பழுத்த எருக்கிலையை வைத்து அதன்மேல் சூடு தாங்கும் அளவுக்குக் குதிகாலை வைத்து எடுத்தால் வலி குணமாகும்.

கட்டிகள் உடையாமல் வேதனை கொடுத்தால் எருக்கு இலையை நெருப்பில் வாட்டி, தாங்கும் சூட்டுடன் கட்டியின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடையும்.எருக்கஞ் செடியின் குச்சியை, கருப்பைக்குள் செலுத்துவது கொடூரமான கருச்சிதைவு முறைகளில் ஒன்றாக உள்ளது.சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு அரைத்து கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

எருக்கன் இலைச் சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு ஒவ்வொன்றிலும் 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்தெடுத்து. இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் வரும் வலி ஆகியன குணமாகும்.இதன் இலையும். வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது.
தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.எருக்கன் இலையில் வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும்.இந்த சூரணத்தை மூக்கில் பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி எரித்து சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.

வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து, மாத்திரை இரண்டையும், 5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில் கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர சிற்றின்பம் பெருகும்.

மூட்டு வலி இது யாருக்கு வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் வரும். 20வது தொடக்கம் 100 வயது வரை எல்லோரையுமே இந்த மூட்டு வலி ஒரு பாடு படுத்திவிடுகிறது.இதற்காக பலர் அதிக விலை கொடுத்து தைலங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பயன் கிடைத்ததா எனக் கேட்டால் இல்லை தான்.

சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்.? அட இருக்கவே இருக்கு எருக்கம் இலை.!இது போதும் மூட்டு வலி மற்றும் குதிகால், கை வலி போன்றவற்றை ஜென்மத்திலும் எம்மை நெருங்காது இருக்க. எருக்கம் இலை சாதாரணமாக எல்லா கிராமத்திலும் இலகுவாக கிடைக்கும். இந்த இலைகளில் ஒரு 5 இலையை பறித்து நன்றாக சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.செங்கல் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இப்போது அந்த சூடான செங்கல்லில் எடுத்த ஐந்து இலையையும் வைய்யுங்கள். இப்போது அதன் மீது மெதுவாக உங்கள் உள்ளங்காலை வைய்யுங்கள்.அந்த இதமான சூடும் எருக்கம் இலையின் மருத்துவமும் உங்களுக்கு இருந்த குதிக்கால் வலியை உடனடியாக தீர்த்துவிடும். அது போல மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?