இலங்கையில் சற்று முன்னர் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு சற்றுமுன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

1028ஆக காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 1030ஆக காணப்படுகின்றது.அவர்களில் 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.