பசிக் கொடுமையால் நாயின் சடலத்தை சாப்பிடும் நபர்..!! (பார்ப்போரைப் பதற வைக்கும் காணொளி)

இந்தியாவில் பசிக் கொடுமையால் நபர் ஒருவர் வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாயின் உடலை சாப்பிடும் பதற வைக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருப்பெற்றதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் சர்வதேச ரீதியில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா போன்ற நாடுகளில் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.தற்போது இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகின்றது.தற்போதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 3,435 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 45,300 பேர் குணமடைந்துள்ள நிலையில் மிகுதி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள் ஊரடங்குச் சட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பலரும் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அங்கு பசிக் கொடுமையால் நபர் ஒருவர் வீதியில் அடிபட்டுக் கிடக்கும் நாயின் உடலை சாப்பிடும் பதற வைக்கும் காட்சி, இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.