கொழும்பில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளி….400 குடும்பங்கள் வெளியேறத் தடை!!

கொழும்பில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளி உயிரிழந்த நிலையில் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருதானை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய நபர் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா நோயாளி என உறுதி செய்யப்பட்டு 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள் உயிரிழந்துள்ளார்.இந்த நபர் தங்கியிருந்த மருதானைப் பகுதியை சேர்ந்த 400 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறவோ உள் செல்லவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.