தமிழ்நாட்டில் மேலும் 688 பேருக்கு கொரோனா வைரஸ்..!! மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது..!!

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை ஒரே நாளில் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் திருவள்ளூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததால், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களும் 61லிருந்து 63 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றை கண்டறிவதற்காக ஒரே நாளில் 10 ஆயிரத்து 333 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 7,466 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறியுள்ள 4,775 பேர் தனிமை வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றில் இருந்து மேலும் 489 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,895 ஆக உயர்ந்துள்ளது.12 வயதுக்குட்பட்டோரில் மொத்தம் 747 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 முதல் 60 வயது வரையிலான 10 ஆயிரத்து 767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 934 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.