கொரோனாவால் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.!! வழமைக்குத் திரும்பும் ஓசோன் படலம்..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகள் லொக் டவுனில் இருக்க, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் ஓசோன் படலம் மீண்டும் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 190 நாடுகள் முடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன.இந்நிலையில், ஓசோன் படலத்தை பாதிக்கும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலுக்குள் வருவது குறைந்துள்ளது. இதனையடுத்து, ஓசோன் படலம் வழமையான நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.

இந்த நிலைமை நீண்டகாலம் நீடித்தால், ஓசோன் படலம் முற்றாக வழமை நிலைமைக்கு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதன் காரணமாக உலகம் முழுவதும் நடக்கும் இயற்கை அனர்த்தங்களை பெரும்பாலும் தவிர்க்க முடியும் எனவும் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.