நிரந்தர வருமானமில்லாத 40,000 பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க யோசனை!

அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றை இறக்குமதி செய்யவதை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் இந்த நடவடிக்கையெடுத்துள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று (2) இதனைத் தெரிவித்தார்.

மருந்துகள், எரிபொருட்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.அத்துடன், அரச ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருமானம் பெறாத 40,000 பேருக்கு 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.