நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி…கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு.!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 15 பேர் குணமடைந்த நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அத்தோடு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 1027 பேரில், 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.